சொல்ல மறந்த ஒரு நன்றி

அமெரிக்காவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது நன்றி தெரிவிக்கும் நாள் (Thanksgiving Day). இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. நம் வாழ்க்கையில் நமக்கு உதவியவர்களை நினைத்துப் பார்க்கவும், அவர்களுக்கு நன்றி சொல்லவும் ஒரு நாள் இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.

வேலையிலும், குடும்பத்திலும், அன்றாட வாழ்க்கையிலும் நாம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம். சில நேரங்களில் அந்த உதவி கிடைத்ததும் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுகிறோம். சில நேரங்களில் நன்றி சொல்ல நினைத்தாலும், அதற்கான சந்தர்ப்பம் அமையாமல் போய்விடுகிறது. அந்த உதவி நமக்கு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பதை, உதவி செய்தவரிடம் சொல்லாமலேயே இருந்திருப்போம்.

வேலையில் ஒருவருக்கொருவர் நன்றி சொல்லும் தருணங்கள் உண்டு. அதேபோல, நம் அன்றாட வாழ்க்கையிலும் நன்றி சொல்ல ஒரு நாளை ஒதுக்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்தபோது, எனக்குத் தைப் பொங்கல் நினைவுக்கு வந்தது.

நம் தைத் திருநாளிலும் நன்றி தெரிவிக்கும் பழக்கம் இருக்கிறது. நமக்கு உணவளிக்க உழைக்கும் உழவர்களை நினைத்துப் பார்க்கிறோம். மாட்டுப் பொங்கலன்று, உழவுக்குத் துணையாக இருக்கும் மாடுகளைக் கொண்டாடுகிறோம். நம் வாழ்வுக்குத் துணையாக இருப்பவர்களை நினைத்து நன்றி தெரிவிப்பது என்ற எண்ணம்தான் இந்த இரண்டு பண்டிகைகளையும் எனக்கு இணைத்துக் காட்டுகிறது.

இதைப் பற்றி யோசிக்கும்போது, திருவள்ளுவரின் இந்தக் குறள் நினைவுக்கு வருகிறது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர் செய்த தீமையை அன்றே மறந்துவிடுவது நல்லது என்கிறார் வள்ளுவர்.

சில உதவிகள் நம் நினைவில் இருக்கும். ஆனால் அவற்றை நாம் இன்னும் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது உதவி செய்தவருக்குத் தெரியாமல் இருக்கலாம். “அன்று நீங்கள் செய்த உதவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்று சொல்வதற்குச் சில நொடிகள்தான் ஆகும். அந்தச் சில வார்த்தைகள் அவருக்குப் பெரிய ஊக்கமாக இருக்கலாம்.

இந்த நாளில், உங்களுக்கு உதவிய ஒருவர் நினைவுக்கு வந்தால், அப்போது சொல்லத் தவறிய நன்றியை இன்று சொல்லலாமே.

இனிய நன்றி தெரிவிக்கும் நாள் வாழ்த்துகள்! (Happy Thanksgiving)

அனைவருக்கும் நன்றி.

அன்புடன்,

மோகன் நடராஜன்

A Thank You I Forgot to Say

Of all the holidays celebrated in the United States, Thanksgiving is my favorite. It falls on the fourth Thursday of November each year. I like that there’s a day to think about the people who’ve helped us and to thank them.

At work, at home, and in everyday life, we help each other in all sorts of ways. Sometimes, as soon as someone helps us, we move on to the next thing. Other times, we mean to thank them, but the moment passes. They may never know how much their help meant to us.

We find moments to thank each other at work. When I thought about what it would be like to set aside a day for gratitude in our own lives, Thai Pongal came to mind.

Gratitude is part of Pongal, too. We think of the farmers who work to put food on our tables. On Mattu Pongal, we celebrate the cattle that help them farm. That’s the connection I see between Pongal and Thanksgiving. Both give us a chance to pause and appreciate those whose work and kindness sustain us.

It reminds me of this verse from Thiruvalluvar.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

Thiruvalluvar asks us to remember the good someone has done for us and to let go of the hurt they caused that very day.

Sometimes we remember a kindness for years, and the person who helped us has no idea. It takes only a few seconds to say, “What you did for me that day really helped.” Those few words can mean a great deal to the person hearing them.

If someone comes to mind today, perhaps now is a good time to say the thank you you meant to say back then.

Happy Thanksgiving!

Thank you

Mohan Natarajan


Discover more from Reflections by Mohan Natarajan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top