முதலில் நாமே முயற்சி செய்வோம்

வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், கடவுச்சீட்டு, வீட்டுப் பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம், —இப்படி அரசு அலுவலகங்கள் தொடர்பான ஒரு வேலை வந்தால், நம்மில் பலருக்கு முதலில் தோன்றுவது, “இதைச் செய்து கொடுக்க யாராவது இருக்கிறார்களா?” என்பதுதான்.

அந்த வேலையை நாமே செய்ய முடியுமா என்று பார்ப்பதற்கு முன்பே, அதைச் செய்து கொடுக்கும் ஒருவரைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். நமக்குத் தெரிந்த வழி அதுவாக இருக்கலாம். நடைமுறை தெரியாமல் இருக்கலாம். அல்லது நாமே செய்தால் அதிக நேரம் ஆகும் என்று நினைக்கலாம்.

ஆனால், நாமே ஒருமுறை முயற்சி செய்து பார்த்திருக்கிறோமா? 

இப்போது பல அரசு சேவைகளுக்கு இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க முடிகிறது. என்னென்ன ஆவணங்கள் தேவை, விண்ணப்பத்தை எப்படிப் பூர்த்தி செய்வது போன்ற விவரங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், சில நேரங்களில் அந்த முதல் முயற்சியைக்கூட நாம் எடுப்பதில்லை. இது நம் தவறில்லை. பல காலமாக நாம் இவ்வாறே பின்பற்றியுள்ளோம். 

கடந்த சில வருடங்களாக, எனக்குத் தேவையான சான்றிதழ்களுக்கும் பெயர் மாற்றங்களுக்கும் முடிந்தவரை நானே இணைய வழியாக விண்ணப்பித்து வருகிறேன். மின் இணைப்பில் பெயர் மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், வீட்டுப் பட்டா பெயர் மாற்றம், என் மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்குத் தேவையான சான்றிதழ்கள் எனப் பலவற்றை இப்படிப் பெற்றிருக்கிறேன்.

எல்லாமே முதல் முயற்சியிலேயே முடிந்துவிட்டன என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது. மீண்டும் முயற்சி செய்திருக்கிறேன். இறுதியில், எனக்குத் தேவையானவற்றைப் பெறவும் முடிந்திருக்கிறது.

இந்த அனுபவங்களில் நான் கவனித்தது ஒன்று: நாம் நினைக்கும் அளவுக்கு எல்லா வேலைகளும் கடினமாக இருப்பதில்லை. சில வேலைகள், மற்றொருவரிடம் ஒப்படைத்து அவரைப் பின்தொடர்வதைவிட, நாமே செய்யும்போது எளிதாக முடிந்துவிடுகின்றன. கூடுதல் செலவும் குறைகிறது.

அதோடு, ஒரு புதிய நடைமுறையைத் தெரிந்துகொள்கிறோம். அடுத்த முறை அதே தேவை வரும்போது எங்கிருந்து தொடங்குவது என்பது தெரியும். நமக்குத் தெரிந்த ஒருவருக்கு இதே உதவி தேவைப்பட்டாலும், நம் அனுபவத்தைப் பகிர முடியும்.

இதற்காக எல்லாவற்றையும் நாமேதான் செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதில்லை. நேரமில்லாமல் இருக்கலாம். விண்ணப்பத்தில் புரியாத விஷயங்கள் இருக்கலாம். இணையதளத்தில் செய்ய முடியாமல், நேரில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கலாம். அப்போது மற்றவர்களின் உதவியை நாடுவது இயல்பானதுதான்.

ஆனால், உதவியை நாடுவதற்கு முன் ஒரு சிறிய முயற்சியை நாம் எடுத்துப் பார்க்கலாம். சம்பந்தப்பட்ட இணையதளத்தைப் பார்ப்பது, தேவையான ஆவணங்களைத் தெரிந்துகொள்வது, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யத் தொடங்குவது. இவ்வளவாவது செய்து பார்க்கலாம்.

அதற்குப் பிறகும் முடியவில்லை என்றால், நண்பர்கள் அல்லது இணைய சேவை முகவர்களை நாடலாம். அப்போது நமக்கு எந்த இடத்தில் உதவி தேவை என்பதும் தெளிவாக இருக்கும். இடைத் தரகர்களிடம் கையூட்டல் கொடுத்து வேலையை முடிக்க நினைப்பதைத் தவிர்க்கவும்.

இதிலிருந்து நான் கற்றுக்கொண்டது, பணத்தைச் சேமிப்பதைத் தாண்டிய ஒரு விஷயம். நம் வேலைகளை நாமே செய்து பார்க்கும்போது, அடுத்த வேலையையும் முயன்று பார்க்கும் நம்பிக்கை கிடைக்கிறது.

அடுத்த முறை இப்படியொரு தேவை வரும்போது, “இதை யாரிடம் கொடுக்கலாம்?” என்பதற்கு முன், “இதை நானே செய்து பார்க்கலாமே” என்று தொடங்கிப் பார்ப்போம்.

அன்புடன்,
மோகன் நடராஜன்

Let’s Try It Ourselves First

An income certificate, a community certificate, a property title transfer, or a name change on an electricity connection—when we need something from a government office, many of us first think, “Who can get this done for me?”

Before checking whether we can do it ourselves, we start looking for someone to handle it. Perhaps that is the approach we are familiar with. Perhaps we do not understand the process. Or perhaps we assume doing it ourselves will take too much time.

But have we tried even once?

Many government services now allow us to apply online. We can also find information about the documents required and how to complete the application. Yet sometimes, we do not take that first step.

Over the past few years, I have tried to apply online myself for the certificates and name changes I have needed. These include changing the name on an electricity connection, transferring a property title, and obtaining certificates required for my son’s school admission.

I cannot say everything worked on the first attempt. Sometimes, my attempts failed. I tried again, and eventually, I received what I needed.

One thing I have noticed through these experiences is that every task is not as difficult as we imagine. Some things are easier to complete ourselves than to hand over to someone else and keep following up. It can also reduce the additional expense.

Along the way, we learn a new process. The next time we have a similar need, we know where to begin. If someone we know needs help, we can share our experience with them too.

I do not believe we must do everything ourselves. We may not have the time. Parts of an application may be unclear. Some tasks may require a visit to the office rather than an online submission. Seeking help in those situations is perfectly reasonable.

But before asking for help, we can make a small attempt: visit the relevant website, check which documents are needed, and start filling out the application.

If we still cannot complete it, we can ask a friend or e-services center. By then, we will also have a clearer understanding of exactly where we need help. But, we can always try to avoid giving bribes to the middleman and get the work done. 

What I have learned goes beyond saving money. When we try to handle our own tasks, we gain the confidence to attempt the next one too.

The next time a similar need comes up, before asking, “Who can do this for me?”, let’s begin with, “Why don’t I try doing this myself?”

Warm regards,
Mohan Natarajan


Discover more from Reflections by Mohan Natarajan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top